புதுச்சேரியில் அடுத்த மாதம் மருத்துவக் கல்லூரிகள் திறக்க வாய்ப்பு: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரியில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டதால், முதல்கட்டமாக அடுத்த மாதம் மருத்துவக் கல்லூரிகள் திறக்க வாய்ப்புள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் த
புதுச்சேரி கருவடிக்குப்பம் கோவில் வளாகத்தில், அகரம் ரோட்டரி சங்கத்தின் மூலமாக அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறையை  திறந்துவைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கோவில் வளாகத்தில், அகரம் ரோட்டரி சங்கத்தின் மூலமாக அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறந்துவைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

புதுச்சேரியில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டதால், முதல்கட்டமாக அடுத்த மாதம் மருத்துவக் கல்லூரிகள் திறக்க வாய்ப்புள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் கோவில் வளாகத்தில், அகரம் ரோட்டரி சங்கத்தின் மூலமாக அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறையை, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.  இதனையடுத்து சித்தானந்தர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் தமிழிசை செய்தியாளரிடம் கூறியதாவது:
கரோனா காலத்தில், பக்தர்கள் மன அமைதி பெற வேண்டும் என்பதால், கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் வழிபட வேண்டும்.

புதுச்சேரியில் கரோனா தொற்று வேகமாக குறைந்து இருக்கிறது. வியாழக்கிழமை நடந்த கரானா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதார அதிகாரிகள், மருத்துவ கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர். தொற்று கட்டுப்பாடான சூழ்நிலை உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். தற்போதைய பாதிப்புகள் குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

மருத்துவ கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வந்திருக்கிறது. மருத்துவ கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டதால், முதல்கட்டமாக அடுத்த மாதம் மருத்துவக் கல்லூரிகள் திறக்க வாய்ப்புள்ளது.

இதனைத்தொடர்ந்து சூழலைக் கண்காணித்து, கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும். இணைய வழிக் கல்வியைக் குறைத்து, படிப்படியாக பள்ளிகள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com