‘நீட் தேர்வு குறித்து பிரதமரிடம் பேசவில்லை’: எல்.முருகன்

பிரதமருடனான சந்திப்பின் போது நீட் தேர்வு குறித்து பேசவில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சனிக்கிழமை தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் (கோப்புப்படம்)
பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் (கோப்புப்படம்)

பிரதமருடனான சந்திப்பின் போது நீட் தேர்வு குறித்து பேசவில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சனிக்கிழமை தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் தில்லியில் உள்ள பிரதமர் அலுவகத்தில் மோடியை இன்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பிற்கு பின் பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

ராமேஷ்வரம், கன்னியாகுமரி, மாமல்லபுரம், தஞ்சை உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது. தென் தமிழகத்தில், புதிதாக தொழிற்சாலைகளை தொடங்க வலியுறுத்தினோம்.

தமிழக அரசியலில் தேச பிரிவினைவாத செயல்பாடுகள் இருப்பதை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். மேலும், நதி நீர் இணைப்பு உள்ளிட்ட தமிழக வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களை கோரிக்கை வைத்துள்ளோம்.

தண்ணீர் சேமிப்பு பிரசாரம், மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுகளை மக்களிடம் எடுத்துச் செல்லும்படி பிரதமர் அறிவுறுத்தாக தெரிவித்தார்.

மேலும், நீட் குறித்து எதுவும் பேசவில்லை எனவும், நீட் தேர்வு நடப்பதை ரத்து செய்ய முடியாது எனத் தெரிந்தும் திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com