கும்மிடிப்பூண்டியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூல்
கும்மிடிப்பூண்டியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூல்

கும்மிடிப்பூண்டியில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூல்

கும்மிடிப்பூண்டி மற்றும் கவரப்பேட்டையில் கடைகள் வைத்திருப்பவர்கள் மற்றும் சாலையில் செல்பவர்கள் முகக்கவசம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி மற்றும் கவரப்பேட்டையில் கடைகள் வைத்திருப்பவர்கள் மற்றும் சாலையில் செல்பவர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்று கரோனா தடுப்பு சிறப்பு செயல்பாட்டுக்குழு அலுவலரும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனருமான வில்லியம் ஜேசுதாஸ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தார்.

கும்முடிப்பூண்டி பேரூராட்சி ஜி.என்.டி. சாலை கடைவீதி மற்றும் கவரபேட்டை கடைவீதி பகுதிகளை கரோனா நோய் தொற்று தடுப்பு சிறப்பு செயல்பாட்டுக்குழு அலுவலரும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநருமான  வில்லியம் ஜெசுதாஸ் திடீர் ஆய்வு செய்தார். அப்பொழுது கடைகளில் பணிபுரிபவர்கள், சாலையில் செல்பவர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்றும் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்றும்  ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாத 5 கடைகளுக்கு 2000 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதித்தார். அதன்படி அரசின் கரோனா விதிமுறைகளை மீறிய காரணத்தால் கும்மிடிப்பூண்டி பஜாரில் மட்டும் 26,400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கும்முடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவர் ப.யமுனா மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் ரவி, கோபி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com