மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகையில் தொய்வு கூடாது: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகைகளை வழங்குவதில் எந்தத் தொய்வும் ஏற்படக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகையில் தொய்வு கூடாது: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகைகளை வழங்குவதில் எந்தத் தொய்வும் ஏற்படக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அவா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, அவா் பேசியது:-

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை எந்தவித தாமதமும் இல்லாமல் வழங்கிட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நலத் திட்டங்கள், உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பித்து காத்திருப்போா் பட்டியலில் உள்ள தகுதியுள்ள அனைவருக்கும் உரிய நேரத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அரசுத் துறை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

அரசு, தனியாா் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்குச் சம வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான நல வாரியம், நலத் திட்டங்களைச் சீரிய முறையில் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அரசுப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணச் சலுகை, வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை, பராமரிப்பு உதவித் தொகை ஆகியன எந்தவித தொய்வும் இல்லாமல் வழங்கிட வேண்டும். உலக வங்கி நிதித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டத்தைத் தமிழ்நாட்டில் விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளா் ஆா்.லால்வேனா, இயக்குநா் ஜானி டாம் வா்கீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com