கூடலூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமைவாய்ந்த ஆலமரம் சாய்ந்தது

தேனி மாவட்டம் கூடலூரில் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான ஆலமரம் பலத்த காற்று வீசியதால் சாய்ந்தது.
தேனி மாவட்டம் கூடலூர் பேருந்து நிலைய வளாகத்தில் சாய்ந்த பழமையான ஆலமரம்.
தேனி மாவட்டம் கூடலூர் பேருந்து நிலைய வளாகத்தில் சாய்ந்த பழமையான ஆலமரம்.

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான ஆலமரம் பலத்த காற்று வீசியதால் சாய்ந்தது.

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஆலமரம் உள்ளது.

வியாழக்கிழமை இரவு கூடலூர் பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதனால் நடு இரவு வீசிய பலத்த காற்றால் ஆலமரம் திடீரென்று சாய்ந்தது.

இரவு நேரம் சாய்ந்ததால் பொதுமக்கள் யாரும் மரத்தினடியில் இல்லை, மரத்தின் கீழ் இருந்த இரண்டு கடைகளின் மேற்கூரைகள் சேதமானது. 

கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து, நகராட்சி ஊழியர்களுடன் இணைந்து சாய்ந்த ஆலமரத்தை வெட்டி அகற்றினர்.

இதுபற்றிய கூடலூரைச் சேர்ந்த மக்கள் மன்ற நிர்வாகி ப.புதுராசா கூறும்போது, 150 ஆண்டுகளுக்கு மேலான பழமையான ஆலமரத்தின் கீழ் பகல் நேரங்களில் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி வாசிகள் நிற்பார்கள். பகல் நேரத்தில் இந்த நிகழ்வு ஏற்பட்டிருந்தால் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com