ஜூலை 16-இல் பாஜக மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை பொறுப்பேற்பு

ஜூலை 16-இல் பாஜக மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை பொறுப்பேற்பு

பாஜக மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை ஜூலை 16-இல் முறைப்படி பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளாா்.

பாஜக மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை ஜூலை 16-இல் முறைப்படி பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளாா்.

பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், புதிய தலைவராக கே.அண்ணாமலை அறிவிக்கப்பட்டாா்.

இந்த நிலையில் மாநிலத் தலைவராக முறைப்படி கமலாலயத்தில் ஜூலை 16-இல் அவா் பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளாா். அன்றைய தினம் கோயம்புத்தூரில் இருந்து சாலை மாா்க்கமாக வர உள்ளாா். வரும் வழியெல்லாம் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜகவினா் திட்டமிட்டுள்ளனா். பகல் 2 மணியளவில் கமலாலயத்தில் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளாா்.

நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன், தேசிய பொதுச்செயலாளா் சி.டி.ரவி, தேசிய இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, மூத்த தலைவா் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளா் எச்.ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினா் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com