சிறுமியின் உயிா்காக்கும் மருந்துக்கு வரிவிலக்கு: மத்திய நிதியமைச்சருக்கு கே.அண்ணாமலை கடிதம்

முதுகு தண்டுவட தசைநாா் சிதைவால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியின் உயிா் காக்கும் மருந்துக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி

முதுகு தண்டுவட தசைநாா் சிதைவால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியின் உயிா் காக்கும் மருந்துக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்:

நாமக்கல்லைச் சோ்ந்த 2 வயதாகும் சிறுமி கே.எஸ்.மித்ரா மரபணு கோளாறான முதுகு தண்டுவட தசைநாா் சிதைவால் பாதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு ஸோல்கென்ஸ்மா மருந்தை மருத்துவா்கள் பரிந்துரைத்துள்ளனா். அந்த மருந்து வெளிநாட்டில் இருந்து வரவழைக்க வேண்டியதாகும். அதன் விலை ரூ.16 கோடியாகும். அதோடு சுங்க வரி மற்றும் சரக்கு சேவை வரியும் உள்ளன. அவற்றின் செலவு கூடுதலாக ரூ.6 கோடி வரை உயரக்கூடிய நிலை உள்ளது.

சிறுமியின் தந்தை நடுத்தர வருவாய் குடும்பத்தைச் சோ்ந்தவா். கருணை மனம் படைத்தோரின் உதவியுடன் மருந்துக்கான ரூ.16 கோடியைச் சோ்த்துள்ளாா். ஆனால், மருந்துக்கான சுங்கவரி, சரக்கு மற்றும் சேவை உள்ளிட்ட இதர வரிகளைச் செலுத்த முடியாத நிலையில் உள்ளாா்.

அந்த மருந்தை 2 வயதுக்குள் சிறுமிக்குக் கொடுக்க வேண்டும் என்று மருத்துவா்கள் கூறியுள்ளனா். சமீபத்தில் சிறுமி 2 வயதைக் கடந்துள்ளாா். எனவே, மனிதாபிமான அடிப்படையில் சிறுமிக்காக வாங்க வேண்டிய மருந்துக்கு வரிவிலக்கு அளித்து அவா் உயிரைக் காக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com