சங்ககிரி தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு 

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ அலுவலகம் சிறப்பு பூஜைகளுடன் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 
சங்ககிரி எம்எல்ஏ அலுவலகம் முன்பு மரக்கன்றினை வெள்ளிக்கிழமை நட்டு வைக்கிறார் சங்ககிரி சட்டப்பேரவை  உறுப்பினர் எஸ்.சுந்தரராஜன்.
சங்ககிரி எம்எல்ஏ அலுவலகம் முன்பு மரக்கன்றினை வெள்ளிக்கிழமை நட்டு வைக்கிறார் சங்ககிரி சட்டப்பேரவை  உறுப்பினர் எஸ்.சுந்தரராஜன்.


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ அலுவலகம் சிறப்பு பூஜைகளுடன் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 

சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த எஸ்.சுந்தரராஜன் வெற்றி பெற்று பேரவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.

அதனையடுத்து சங்ககிரி நகர் பகுதியில் எம்எல்ஏ அலுவலகம் செப்பனிடபட்டும்,  வர்ணங்கள் பூசப்பட்டது.  இதனையடுத்து வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அலுவலகத்தை பேரவை உறுப்பினர் திறந்து வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். பின்னர் அலுவலக வளாகம் முன்பு இரு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 

சங்ககிரி பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.சுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:

சங்ககிரி  சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் வாரத்தில் மூன்று நாள்கள் திறந்திருக்கும் மற்ற நாள்களில் பொதுமக்களை அந்தந்தப்பகுதிகளில் சந்தித்து மனு மக்களை பெற்று குறைகளை தீர்த்து வைக்க உள்ளேன். மேலும் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் மக்கள் அளிக்கப்படும் மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார். 

அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜா, அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலர் என்சிஆர்.ரத்தினம், துணைச் செயலர் மருதாஜலம், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவி மகேஸ்வரிமருதாஜலம், துணைத்தலைவர் சிவக்குமாரன், பாஜக மேற்கு மாவட்டச் செயலர் ரமேஷ்கார்த்திக், நகரத் தலைவர் முருகேசன், அதிமுக நகரச் செயலர் சி.செல்வம், முன்னாள் நகரச்செயலர் ஆர்.செல்லப்பன், முன்னாள் ஒன்றியச் செயலர் என்எம்எஸ்.மணி, முன்னாள் தொகுதிகழகச்செயலர் வி.ஆர்.ராஜா, மகளிரணி நிர்வாகிகள் மங்கையர்கரசி, பெர்சியா, பிரியா, சின்னாகவுண்டனூர் நிர்வாகி கருப்புசாமி, வேலுமணி, உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com