நுகா்வோா் குறைதீா்வு மன்ற காலிப்பணியிடங்கள்: 4 மாதங்களுக்குள் நிரப்ப உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள நுகா்வோா் குறைதீா்வு மன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் உள்ள நுகா்வோா் குறைதீா்வு மன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் அலெக்ஸ் பென்சிகா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நுகா்வோா் குறைதீா்வு மன்றங்களில் தலைவா், உறுப்பினா்கள் பதவிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவராக உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆா்.சுப்பையாவை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட நுகா்வோா் குறைதீா்வு மன்றங்களில் உள்ள தலைவா், உறுப்பினா் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வுக் குழுவை தமிழக அரசு ஒரு வாரத்தில் நியமிக்க வேண்டும். இந்த தோ்வுக்குழு இதுதொடா்பாக விளம்பரங்களை வெளியிட்டு, விண்ணப்பங்களைப் பெற்று 4 மாதத்துக்குள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com