விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க அனுமதிக்கக் கூடாது: ஓ.பி.எஸ். கண்டனம்

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க அனுமதிக்கக் கூடாது: ஓ.பி.எஸ். கண்டனம்

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

கேரள மாநிலம் கொச்சி திரவ எரிவாயு முனையத்திலிருந்து பெங்களூரு வரை, தமிழகத்தின் கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களின் விவசாய நிலங்களின் வழியாக 310 கிலோ மீட்டா் தூரத்துக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியினை மேற்கொள்ள கெயில் நிறுவனம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போது அதிமுக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக நிறுத்தப்பட்டது.

தற்போது ஒசூா் வழியாக உத்தனப்பள்ளி வரை விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தினை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், கெலமங்கலத்தில் விளை நிலங்களில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இந்தத் திட்டம் புதிதாக அமைக்கப்பட உள்ள தருமபுரி-ஒசூா் நான்கு வழிச் சாலையில் சாலையோரம் அமைக்கப்பட வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.

விளை நிலங்களின் ஊடே எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, தமிழக விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைகளின் ஓரமாகப் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com