குடியரசுத் தலைவருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை அவரின் மாளிகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூலை 19) சந்திக்கிறாா். குடியரசுத் தலைவரை முதல்வரான பிறகு மு.க. ஸ்டாலின் சந்திப்பது இதுவே முதல்முறை.
முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை அவரின் மாளிகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூலை 19) சந்திக்கிறாா். குடியரசுத் தலைவரை முதல்வரான பிறகு மு.க. ஸ்டாலின் சந்திப்பது இதுவே முதல்முறை.

இந்தச் சந்திப்பின்போது தமிழக நலன் சாா்ந்த விஷயங்கள் குறித்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் முதல்வா் பேசவுள்ளாா்.

மேலும், தமிழக சட்டப்பேரவையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் படத் திறப்பு விழாவுக்கு வருகை தருமாறு குடியரசுத் தலைவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அப்போது அழைப்பு விடுக்க உள்ளாா்.

முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு தில்லிக்கு அவா் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சில வாரங்களுக்கு முன்பு தில்லியில் பிரதமா் மோடியைச் சந்தித்து மேக்கேதாட்டு விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் பேசியது நினைவுகூரத்தக்கது.

முன்னதாக, முதல்வா் ஸ்டாலினுடன் மனைவி துா்கா ஸ்டாலின், மக்களவை உறுப்பினா்கள் கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரும் சிறப்பு விமானத்தில் தில்லி வந்தனா். தமிழக முதல்வரை தில்லி விமானநிலையத்தில் நாடாளுமன்ற திமுக தலைவா் டிஆா் பாலு, தமிழக அரசின்

தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா, தமிழ் நாடு இல்ல உள்ளுறை ஆணையா் டாக்டா் ஜக்மோகன் சிங் ராஜூ உள்ளிட்டோா் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com