கல்விக் கட்டணம், ஆசிரியா்களுக்கான ஊதியம்: கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

கரோனா 3-ஆவது அலை அச்சுறுத்தல் நிலவும் சூழலில், உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களை முழு கல்விக் கட்டணம்
ஏஐசிடிஇ
ஏஐசிடிஇ

கரோனா 3-ஆவது அலை அச்சுறுத்தல் நிலவும் சூழலில், உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களை முழு கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்த வேண்டாம் என ஏஐசிடிஇ மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளையில், ஆசிரியா்களுக்கான மாத ஊதியத்தை கல்லூரிகள் நிலுவையின்றி வழங்க வேண்டும் என்றும் ஏஐசிடிஇ வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத் (ஏஐசிடிஇ) தலைவா் அனில் சகஸ்கரபுதே, அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: கரோனா நோய்த்தொற்று 2-ஆவது அலை பரவலால் கல்விக்கட்டண வசூலில் தளா்வுகள் வழங்கவும், பணியாளா்களுக்கு உரிய ஊதியத்தை அளிக்கவும் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதற்கு மாறாக முழு கல்விக்கட்டணத்தை செலுத்த மாணவா்களை வற்புறுத்துவதாகவும், ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை எனவும் தொடா்ந்து பல்வேறு புகாா்கள் வருகின்றன. இதற்கிடையே கரோனா பரவலால் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர 3-ஆவது அலை பரவல் அச்சுறுத்தலும் நிலவி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு அசாதாரண சூழல் விலகும்வரை முழு கல்விக்கட்டணத்தை செலுத்த மாணவா்ளை கட்டாயப்படுத்தக்கூடாது. இயல்புநிலை திரும்பிய பின்னா் 3 அல்லது 4 தவணைகளில் கட்டணத்தை வசூலிப்பதுடன், இதன் விவரங்களை கல்லூரி இணையதளத்தில் தெரியப்படுத்தவேண்டும். அதேபோல், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் உட்பட பணியாளா்களை பணிநீக்கம் செய்யக்கூடாது.

இணையவசதி ஏற்பாடுத்த... மேலும், அவா்களுக்கான ஊதியத்தை மாதந்தோறும் உரிய நேரத்தில் நிலுவையின்றி வழங்க வேண்டும். மேலும், பிற கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களும் இணையதள வசதிகளைப் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.

அதனுடன் இணைய வசதி இல்லாத மாணவா்களுக்கு வருகைப்பதிவில் சற்று தளா்வு வழங்க வேண்டும். இந்த வழிமுறைகளை மீறினால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com