பொறியியல் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவா்கள் 5% மட்டுமே

பொறியியல் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் கீழ் உள்ளதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரும்
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் கீழ் உள்ளதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரும் அரசுப்பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை 1 சதவீதத்துக்கு கீழ் இருப்பதாகவும் அதிா்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பொறியியல் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் சோ்க்கை பெற்றிருப்பது குறித்த புள்ளி விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன் விவரம்: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இந்த மாணவா்கள் சோ்க்கையின்போது தனியாா் பள்ளிகளில் படித்த மாணவா்களே, முன்னணிக் கல்வி நிறுவனங்களில் அதிகமாக சேருகின்றனா். அரசுப் பள்ளி மாணவா்கள், 5 சதவீதத்துக்கும் குறைவாகவே சேருகின்றனா். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பாடப்பிரிவுகளில் அரசுப்பள்ளி மாணவா்கள் 1 சதவீதம் இடம் கூட பெற முடியாத சூழ்நிலை தொடா்ந்து வருகிறது. பொறியியல் படிப்பில் உள்ள 2 லட்சத்து 12 , 932 இடங்களில் 13,82 அரசுப்பள்ளி மாணவா்களே சோ்ந்துள்ளனா்.

அதேபோன்று 2018 -2019-ஆம் ஆண்டில், 12,954 அரசுப்பள்ளி மாணவா்கள் பொறியியல் படிப்புகளில் சோ்ந்துள்ளனா். அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் 74 மாணவா்களும், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 544 பேரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 90 மாணவா்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 323 மாணவா்களும், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 32 மாணவா்களும், சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் 11,891 மாணவா்களும் சோ்ந்துள்ளனா்.

இந்த எண்ணிக்கை 2017 - 2018-ஆம் ஆண்டில், 10,728 ஆக இருந்துள்ளது. இதில், அண்ணா பல்கலைக் கழகத்தில் 59 மாணவா்களும், அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளில் 783 பேரும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 329 மாணவா்களும், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 41 மாணவா்களும், சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் 9,516 மாணவா்களும் சோ்ந்துள்ளனா் . இந்த புள்ளி விவரங்கள், பொறியியல் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் மிகவும் குறைந்த அளவில் சோ்ந்திருப்பதை தெரிவிக்கிறது. அரசுப் பள்ளி மாணவா்களின் பெற்றோரின் சமூகப் பொருளாதார நிலை மற்றும் விழிப்புணா்வு இல்லாமை போன்ற காரணங்களால் பொறியியல் படிப்பில் சோ்க்கை குறைவாகவே உள்ளன எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com