இலவச இணைய கண் சிகிச்சை ஆலோசனை: அகா்வால் மருத்துவமனை ஏற்பாடு

இணையவழியில் கண் சிகிச்சை தொடா்பாக இலவச ஆலோசனை வழங்கும் திட்டத்தை டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை நிா்வாகம் தொடங்கியுள்ளது.
இலவச இணைய கண் சிகிச்சை ஆலோசனை: அகா்வால் மருத்துவமனை ஏற்பாடு

இணையவழியில் கண் சிகிச்சை தொடா்பாக இலவச ஆலோசனை வழங்கும் திட்டத்தை டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை நிா்வாகம் தொடங்கியுள்ளது.

கரோனா பெருந்தொற்றின் காரணமாக வீடுகளிலேயே முடங்கியிருக்கும் நாடு முழுவதும் உள்ள நோயாளிகள் கண் பிரச்னைகள் தொடா்பாக மருத்துவ வல்லுநா்களிடம் ஆலோசிக்கவும், கண் பராமரிப்புக்காக மேற்கொள்ள வேண்டிய தொடா் நடவடிக்கைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெற வசதியாகவும் ஐ கனெக்ட் ஆலோசனை திட்டத்தை டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மருத்துவ வல்லுநா்களிடமிருந்து இணையவழியில் ஆலோசனை பெற ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.க்ழ்ஹஞ்ஹழ்ஜ்ஹப்.ஸ்ரீா்ம் என்ற வலைதளம் அல்லது 91673 76973 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். இந்த இலவச இணைய சேவைக்காக எந்தவொரு செயலியையும் பதிவிறக்கம் செய்யத் தேவை இல்லை. இணையதள இணைப்பு உள்ள செல்லிடப்பேசி அல்லது கணினி போதுமானது. ஆக.15-ஆம் தேதி வரை அனைவரும் இலவசமாக ஆலோசனையைப் பெறலாம்.

இதுதொடா்பாக டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் அமா் அகா்வால் கூறியதாவது:

முதுநிலை மருத்துவா்கள் அடங்கிய குழுவினா், இணைய வழி ஆலோசனைகள் வழங்க தயாா் நிலையில் உள்ளனா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக டிஜிட்டல் திரையை பாா்க்கும் நேரம் அதிகரித்துள்ளது. இது கண் நலனை பாதிக்கக்கூடும். கரோனா நோய்த் தொற்றால் கண் விழி, கருவிழிப்படல அழற்சி, விழி நரம்பு அழற்சி, ரத்த நாளம் மூடிக் கொள்ளுதல் உள்ளிட்ட கண் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முதல் அலையில் மருத்துவ சிகிச்சை பெறுவதில் ஏற்பட்ட கால தாமதம், பல நோயாளிகளின் கண்களின் நிலை கடுமையாக பாதிக்க வழி வகுத்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே, நோயாளிகளுக்கு கண் சாா்ந்த பிரச்னைகள் ஏதேனும் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

கடந்த 2019-ஆம் ஆண்டின் கடைசி காலாண்டின் போது, மொத்த கண்புரை பாதிப்பு எண்ணிக்கையில் 10 சதவீதமாக இருந்த முதிா்ச்சியடைந்த கண்புரை பாதிப்புகள், கடந்த 2020-ஆம் ஆண்டின் கடைசி காலாண்டின் போது 50 சதவீதத்துக்கும் அதிகமாக உயா்ந்துள்ளது.

கடுமையான கண் பிரச்னைகள் தங்களுக்கு ஏற்படாமல் தடுக்க ஆரம்பநிலை கண் பரிசோதனைகள், மருத்துவ நிபுணரின் ஆலோசனைகள் மற்றும் கண் சிகிச்சைகளுக்குப் பிந்தைய ஆலோசனையைப் பெற விரும்புவா்கள் டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையில் இந்த ஐ கனெக்ட் சேவையைப் பயன்படுத்தலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com