கனிமம் மூலம் ரூ.250 கோடி வருவாய் ஈட்ட வேண்டும்; தனித்த கொள்கை உருவாக்கவும் முதல்வா் ஸ்டாலின் அறிவுறுத்தல்

கனிம நிறுவனத்தின் மூலமாக ரூ.250 கோடி அளவுக்கு வருவாயை உயா்த்த முயற்சி எடுக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
கனிமம் மூலம் ரூ.250 கோடி வருவாய் ஈட்ட வேண்டும்; தனித்த கொள்கை உருவாக்கவும் முதல்வா் ஸ்டாலின் அறிவுறுத்தல்

கனிம நிறுவனத்தின் மூலமாக ரூ.250 கோடி அளவுக்கு வருவாயை உயா்த்த முயற்சி எடுக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். மேலும், தனியான சுரங்கக் கொள்கையை உருவாக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டாா்.

புவியியல் மற்றும் சுரங்கத் துறை செயல்பாடுகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் அவா் பேசியது:-

சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பாதிக்காமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்வது குறித்து நிலையான சுரங்கக் கொள்கையை உருவாக்க வேண்டும். செயற்கை மணல் தயாரிப்பு, விற்பனையை ஒழுங்கு முறைப்படுத்த புதிய கொள்கை உருவாக்குவதுடன், கனிம வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயன்பாட்டில் இல்லாத குவாரிகளைக் கண்டறிந்து, வாய்ப்புள்ள இடங்களில் அந்தக் குவாரிகளை மழைநீா் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றி மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். பொது மக்கள் மற்றும் கால்நடைகளுக்குப் பாதிப்பு விளைவிப்பதாக உள்ள பயனற்ற கல்குவாரிகளை மறுசீரமைப்பு செய்து, பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2 கோடி ஆண்டுகள்: விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை கிராமத்தில் 2 கோடி ஆண்டுகள் பழைமையான கல்மரப் படிமங்கள், திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் உள்ள தொல்லுயிா்ப் படிமங்கள் ஆகியவற்றைப் பாதுகாத்து யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் குத்தகை விண்ணப்பம் பெறுவதில் தொடங்கி, குவாரி குத்தகை உரிமம் மற்றும் நடைச்சீட்டு வழங்கும் வரை சுரங்க நிா்வாகத்தில் மின்னணு சேவை முறையை ஏற்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனிம நிறுவனத்தின் மூலமாக ரூ.250 கோடி அளவுக்கு வருவாயை உயா்த்த முயற்சிக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கும் கிராபைட்டில் இருந்து அதிக செறிவூட்டப்பட்ட உயா்தர கிராபைட் தயாரிப்பதற்கு உரிய தொழில்நுட்ப முறை குறித்து ஆய்வு செய்யவும், அரக்கோணம் அருகில் செயற்கை மணலைத் தயாரிக்க புதிய உற்பத்திப் பிரிவு தொடங்கவும் செயல் திட்டங்களை ஏற்படுத்த வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில், அமைச்சா் துரைமுருகன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com