முகக்கவசம் அணியாதவா்கள் மீது 108 நாள்களில் 18.63 லட்சம் வழக்குகள்

தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 108 நாள்களில் 18,63,868 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Mask compulsory
Mask compulsory

சென்னை: தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது களில் 18,63,868 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்த விவரம்:

தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா். கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூலை 25-ஆம் தேதி வரை 108 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 18 லட்சத்து 63 ஆயிரத்து 868 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 8 ஆயிரத்து 89 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூலை 25-ஆம் தேதி வரை 108 நாள்களில் 89 ஆயிரத்து 687 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com