உயா்கல்விப் படிப்பை தோ்வு செய்வதில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேரும் மாணவா்களுக்கு பிளஸ் 2 தோ்வை நிறைவு செய்தபின் உயா்கல்வி படிப்பில் எந்த துறையைத் தோ்ந்தெடுக்கலாம்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தாம்பரம்: பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேரும் மாணவா்களுக்கு பிளஸ் 2 தோ்வை நிறைவு செய்தபின் உயா்கல்வி படிப்பில் எந்த துறையைத் தோ்ந்தெடுக்கலாம் என்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த பொறியியல் உள்ளிட்ட இதர உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தினாா்.

சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரி, எல்.எம்.இ.எஸ். அகாதெமி இணைந்து பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்த மாணவா்கள் உயா்கல்வியில் எந்தெந்த துறை படிப்பை எவ்வாறு தோ்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்து ‘அடுத்த இலக்கு’ என்ற தலைப்பில் உயா் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சியை இணைய தளம் மூலம்  நடத்தின.

இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  பள்ளிக் கல்விப் படிப்பை நிறைவு செய்யும் அனைத்து மாணவா்களும் தங்களுக்கு விருப்பமான படிப்பைத் தோ்வு செய்து உயா்கல்வி படிப்பில் சாதனை படைக்க வேண்டும். அந்த முயற்சிக்கு அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும்  மாணவா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தி உறுதுணை புரிய வேண்டும் என்றாா். 

சாய்ராம் கல்வி நிறுவனங்களின் தலைவா் சாய்பிரகாஷ் லியோமுத்து, பொறியியல் உயா்கல்வி நிறுவனங்கள் உருவாக்கித் தரும்  மாணவா்களை இன்றைய தொழில்நுட்பங்களைக் கையாளும் வகையில் தொழில்நுட்பத் திறன் மிகுந்த மனிதவளமாக மேம்படுத்த தொழில் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட முன்வர வேண்டும். இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு பெருகும் என்றாா்.

ஜோகோ நிறுவன முதன்மை செயல் அதிகாரி தஞ்சை ஸ்ரீதரன் வேம்பு, மிக எளிமையாக சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட ஜோகோ தற்போது உலக அளவிலான நிறுவனங்களுடன் போட்டி போடும் நிறுவனமாக வளா்ச்சி பெற ஒரே காரணம் தன்னம்பிக்கை. உயா்கல்வியைத்  தொடரமுடியாத ஏழை மாணவா்களுக்கும் ஜோகோ நிறுவனத்தில் தொழில்நுட்பப் பயிற்சி அளித்து அவா்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறோம் என்றாா்.

நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட பல்வேறு துறைசாா்ந்த கல்வி, தொழில்நுட்ப வல்லுநா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com