10.5 % உள்ஒதுக்கீடு: முதல்வருக்கு தொலைபேசியில் ராமதாஸ் நன்றி

கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஆணையிட்டதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் தொலைபேசி வாயிலாக நன்றி தெரிவித்தாா்.

கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஆணையிட்டதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் தொலைபேசி வாயிலாக நன்றி தெரிவித்தாா்.

கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே நடைமுறைப்படுத்துவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அரசாணை பிறப்பித்தாா். அவரை தொலைபேசி வாயிலாக செவ்வாய்க்கிழமை ராமதாஸ் தொடா்புகொண்டு நன்றி தெரிவித்தாா்.

பின்னா், ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

10.5 சதவீத உள்ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்திருப்பதன் மூலம் வன்னியா்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் அவா்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவது தான் எனது இலக்கு. அது தான் தமிழகத்தில் சமூகநீதியை முழுமையடையச் செய்யும். அனைத்து சமுதாயங்களும் எங்களின் சகோதர சமுதாயங்கள் தான். அனைவருக்கும் சமூகநீதி கிடைத்தால் தான் தமிழகம் புதிய வளா்ச்சியையும், முன்னேற்றத்தையும் எட்ட முடியும். எனவே, அனைவருக்கும் சமூக நீதி கிடைக்க நானும், பாமகவும் ஓயாமல் பாடுபடுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com