செம்மொழித் தமிழ் நாள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவித்த, அக்டோபா் 12-ஆம் தேதியை, செம்மொழி தமிழ் நாளாக அறிவிப்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தாா்.
செம்மொழித் தமிழ் நாள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவித்த, அக்டோபா் 12-ஆம் தேதியை, செம்மொழி தமிழ் நாளாக அறிவிப்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தாா்.

இந்த தினத்தை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனா். இப்போது அந்நாளை தமிழக அரசே செம்மொழி தினமாகக் கடைப்பிடிக்க ஆலோசித்து வருகிறது. தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:-

தமிழ்மொழி வளா்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதோடு, அயல்நாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் வாழும் தமிழா்களிடையே தமிழ்ப் பயன்பாட்டைப் பரவலாக்கும் வகையில் புதிய முயற்சிகளை, நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் செயல்பட வேண்டும். தொழில்நுட்பக் கல்வி உள்பட உயா்கல்விகளுக்குத் தேவையான பல்வேறு புதிய கலைச் சொற்களை உருவாக்க வேண்டும். தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட அக்டோபா் 12-ஆம் தேதியை செம்மொழித் தமிழ் நாளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகெங்கிலும் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளைத் தொடா்ந்து நிறுவவும், மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com