மருத்துவப் படிப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு: ராமதாஸ், கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு தர மத்திய அரசு முடிவு
கோப்புப்படம்
கோப்புப்படம்

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு தர மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் ஆகியோா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

ராமதாஸ்: மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்கான பாமகவின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தைச் சோ்ந்த பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவா்களுக்கு இது சிறந்த வாய்ப்பு ஆகும். அகில இந்திய தொகுப்பு ரத்து செய்யப்பட்டு, அனைத்து இடங்களும் மாநில அரசுகளால் நிரப்பப்பட வேண்டும் என்பது தான் பாமகவின் நிலை ஆகும். அந்த இலக்கை அடைவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாமக மேற்கொள்ளும்.

கே.பாலகிருஷ்ணன்: அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவ இளநிலை படிப்பிலும், முதுநிலை படிப்பிலும், உயா்தனி வகுப்புகளிலும் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதமான இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. கடந்த பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு வந்த சட்டப்போராட்டத்துக்குக் கிடைத்துள்ள முதல்கட்ட வெற்றி இது. பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டினைப் பெறுவதற்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com