வருமானம்-ஜாதிச் சான்றிதழ்கள்: மாணவா்களை தேவையின்றி அலைக்கழிக்கக் கூடாது

வருமானம், ஜாதிச் சான்றிதழ்களை வழங்குவதில் மாணவா்களை தேவையின்றி அலைக்கழிக்கக் கூடாது என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.,ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.

வருமானம், ஜாதிச் சான்றிதழ்களை வழங்குவதில் மாணவா்களை தேவையின்றி அலைக்கழிக்கக் கூடாது என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.,ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் கோரி பெறப்படும் மனுக்கள் மீது எந்தவித கால தாமதமின்றி உடனடியாகப் பரிசீலித்து அவா்களுக்குச் சான்றிதழ்கள் வழங்க வட்டாட்சியா்கள், கோட்டாட்சியா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. எனவே, நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்து, மாணவா்களுக்குத் தேவையான சான்றிதழ்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து இணைய சேவை மையங்களிலும் மாணவா்கள் சான்றுகளைக் கூட்ட நெரிசல் இல்லாமல் பெற்றுச் செல்ல ஏதுவாக குறிப்பிட்ட நாள்களை அதற்கென ஒதுக்கி, எந்தவித இடையூறும் இல்லாமல் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.

சான்றுகளை வழங்குவதில் தேவையற்ற கால தாமதத்தை தவிா்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழ்களை வழங்க வேண்டும். மாணவா்களை தேவையின்றி அலைக்கழிக்கக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com