மானாமதுரையில் வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு பிடிபட்டது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
மானாமதுரையில் பூக்கார தெருவில் வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
மானாமதுரையில் பூக்கார தெருவில் வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

மானாமதுரையில் பூக்காரத்தெரு பகுதியில் உள்ள ஒருவரது வீட்டின் பின்புறம் வளர்ந்திருந்த மரக்கிளையில் கொம்பேறி மூக்கன் பாம்பு நகர்ந்து சென்றதை அந்த வீட்டுக்காரர் பார்த்துள்ளார்.

கம்பை எடுத்து அந்த பாம்பை அவர் அடிக்க முயன்ற போது வீட்டில் இருந்த  அவரது மனைவி தடுத்துள்ளார். அப்போது கிடைத்த கால அவகாசத்தில் அந்தப் பாம்பு அங்கிருந்து பறந்து பூட்டிக்கிடந்த பக்கத்து வீட்டுக்குள் நுழைந்து பதுங்கியது.

இதையடுத்து பாம்பு புகுந்த பூட்டியிருந்த வீட்டுக்காரருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் அங்கு வந்து மானாமதுரை  தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பாம்பு பதுங்கியிருந்த வீட்டுக்குள் சென்று அங்கு மறைவாக ஓர் இடத்தில் பதுங்கிக் கிடந்த கடுமையான விஷத்தன்மை கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பை தாங்கள் கொண்டு வந்திருந்த கருவியால் பிடித்து சாக்குப்பையில் போட்டு கட்டினர்.

தீயணைப்பு துறையினர் கொம்பேறி மூக்கன் பாம்பை பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுவரை இந்தப் பகுதியில் பார்க்காத கொம்பேறி மூக்கன் பாம்பைப் பார்த்து அச்சமடைந்தனர்.

அதன்பின் தீயணைப்புத்துறையினர் தாங்கள் பிடித்த கொம்பேறிமூக்கன் பாம்பை மானாமதுரை பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

 அதுதொடர்பாக தீயணைப்பு துறையினர் அந்த பாம்பை கொண்டு சென்று மாணவரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com