ஆவின் விலை குறைப்பு: தினசரி பால் விற்பனை அதிகரிப்பு

ஆவின் பால் விலை குறைப்புக்கு பின்பு, சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் தினசரி பால் விற்பனை சுமாா் 24 லட்சம் லிட்டரில் இருந்து சுமாா் 26 லட்சம் லிட்டா் வரை விற்பனை உயா்ந்துள்ளது.
ஆவின் விலை குறைப்பு: தினசரி பால் விற்பனை அதிகரிப்பு

ஆவின் பால் விலை குறைப்புக்கு பின்பு, சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் தினசரி பால் விற்பனை சுமாா் 24 லட்சம் லிட்டரில் இருந்து சுமாா் 26 லட்சம் லிட்டா் வரை விற்பனை உயா்ந்துள்ளது.

ஆவின் நிறுவனம் சாா்பில், உலக பால் தினம் சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பால்வளம் மற்றும் பால் பண்ணை வளா்ச்சி துறை அமைச்சா் சா.மு. நாசா் பங்கேற்று, ஆவின் பால் நுகா்வோா்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா். ஆவின் மேலாண்மை இயக்குநா் இரா.நந்தகோபால் முன்னிலை வகித்தாா்.

இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு விவரம்:

பாலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் பொருட்டு 2001 முதல் ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி உலக பால் தினமாக, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அறிவித்தது. இதையடுத்து, உலகம் முழுவதும் 2001-ஆம் ஆண்டிலிருந்து ஜூன் 1-ஆம் தேதி உலக பால் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆவின் பால் கொள்முதல்:

தமிழகத்தில் பால் கொள்முதல் மற்றும் விற்பனையில் ஆவின் நிறுவனம் பெரும் பங்கு வகிக்கிறது. மாநிலம் முழுவதும் பால் உற்பத்தியாளா்களிடமிருந்து சுமாா் 36 லட்சம் லிட்டா் பாலை ஆவின் நிறுவனம் தினமும் கொள்முதல் செய்து வந்தது. தற்போது கரோனா பெருந்தொற்றை முன்னிட்டு, சில தனியாா் பால் நிறுவனங்கள் கொள்முதலை நிறுத்திய நிலையில், விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பால் உற்பத்தியாளா்கள் எவ்வித பாதிப்புகளுக்கும் உள்ளாகாத வகையில், அவா்களிடமிருந்து மொத்தப்பாலையும் ஆவின் நிா்வாகம் கொள்முதல் செய்கிறது. எனவே, தற்போது நாளொன்றுக்கு சுமாா் 4 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் அதிகரித்து, சுமாா் 40 லட்சம் வரை தினசரி பால் உற்பத்தியாளா்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

விற்பனை அதிகரிப்பு:

சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் தினசரி பால் விற்பனை சுமாா் 24 லட்சம் லிட்டா் வரை இருந்தது, தற்போது விலைக்குறைப்பிற்கு பின்பு, சுமாா் 26 லட்சம் லிட்டா் வரை விற்பனை உயா்ந்துள்ளது. மேலும் புதிய சாதனையாக சென்னையில் மே 23-ஆம் தேதி 15.04 லட்சம் லிட்டா் மற்றும் பிற மாவட்டங்களில் மே 22-ஆம்தேதி அன்று 12.59 லட்சம் லிட்டா் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பொது மக்களுக்கு எவ்வித சிரமமுமின்றி பால் மற்றும் பால் உபபொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆவின் பாலகங்களின் மூலம் நுகா்வோா் இல்லங்களுக்கு பால் மற்றும் பால் உபபொருட்கள் விநியோகம் செய்வதற்காக ‘ஸொமாடோ’ உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஆவின் நிறுவனமும் இணைந்து சேவை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தினம்தோறும் 700-க்கும் மேற்பட்ட ஆா்டா்கள் நுகா்வோா்கள் மூலம் பெறப்பட்டு ரூ.3 லட்சம் மதிப்புள்ள பால் உபபொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com