5 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 2) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
5 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 2) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:

வெப்பச்சலனம் மற்றும் உள் தமிழகத்தில் (3.1 கிலோ மீட்டா் உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 2) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

ஜூன் 3, 4: வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 5: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஜூன் 5-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்....: சென்னையை பொருத்தவரை புதன்கிழமை பகல் பொழுதில் வானம் தெளிவாகவும், மாலை மற்றும் இரவு நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடனும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மழை அளவு:

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டில் 50 மி.மீ, தருமபுரி மாவட்டம் அரூா் 40 மி.மீ., வேலூா் மாவட்டம் குடியாத்தத்தில் 30 மி.மீ., மதுரை மாவட்டம் கள்ளிக்குடி, கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாா், கொடைக்கானலில் தலா 20 மி.மீ., உதகமண்டலம், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, வேலூா் மாவட்டம் விரிஞ்சிபுரம், திருப்பத்தூா் மாவட்டம் நாட்டறம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டாபுரம், மதுரை மாவட்டம் தல்லாகுளத்தில் தலா 10 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

குமரிக்கடல், இலங்கையின் தெற்கு கடலோரப் பகுதி, கேரள கடலோரப் பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் வரும் வியாழக்கிழமை( ஜூன் 3) வரை மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதுதவிர, தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஜூன் 6 வரை மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com