புதுச்சேரி: புதுச்சேரி பாஜக தலைவர்கள் பெங்களூரூ பயணம்

புதுவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் ரங்கசாமி பதவியேற்ற நிலையில், கூட்டணியில் உடன்பாடு ஏற்படாததால், அமைச்சர்கள், சட்டப் பேரவைத் தலைவர் பதவி ஏற்பு தாமதமாகி வருகிறது.
புதுச்சேரி: புதுச்சேரி பாஜக தலைவர்கள் பெங்களூரூ பயணம்

புதுவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் ரங்கசாமி பதவியேற்ற நிலையில், கூட்டணியில் உடன்பாடு ஏற்படாததால், அமைச்சர்கள், சட்டப் பேரவைத் தலைவர் பதவி ஏற்பு தாமதமாகி வருகிறது.

இந்த நிலையில், என்.ஆர் காங்கிரஸ்-பாஜக இடையே பதவி பங்கீட்டில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதால், விரைவில் அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு நடைபெறும் என பாஜக தரப்பில் புதன்கிழமை கூறப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகாவில்  உள்ள பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார்சுரானாவை சந்தித்து, இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்த புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன், நமச்சிவாயம், செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் திடீரென பெங்களூர் சென்றுள்ளனர்.

புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார்சுரானாவிடம் வழங்கி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு புதுவை நிர்வாகிகள் அவரை சந்தித்துள்ளனர்.

பதவி ஏற்பு குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த பயணம் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com