பத்திரிகையாளா்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்:  முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பணியின் போது மரணம் அடைந்த பத்திரிகையாளா்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு அறிவித்த  தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளா்கள் குடும்பத்தின
கரோனா தொற்றால் உயிரிழந்த தினமணி செய்தியாளா் எம். சரவணக்குமாரின் குடும்பத்தினரிடம் தமிழக அரசின் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கரோனா தொற்றால் உயிரிழந்த தினமணி செய்தியாளா் எம். சரவணக்குமாரின் குடும்பத்தினரிடம் தமிழக அரசின் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை: பணியின் போது மரணம் அடைந்த பத்திரிகையாளா்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு அறிவித்த  தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளா்கள் குடும்பத்தினரிடம் வழங்கினார். 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை ஒட்டி , தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரோனா நிவாரணம் 2-ஆவது தவணை ரூ.2,000, 14 மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட 5 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக அரசின்  தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை பெற்ற  கரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளா்களின் குடும்பத்தினர்.

இதனைத்தொடர்ந்து பணியின் போது மரணம் அடைந்த பத்திரிகையாளா்கள் குடும்பத்துக்கு தமிழக அரசின்  தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அளிக்கும் திட்டத்தின்படி, தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை அந்த குடும்பத்தினரிடம் நிதியுதவியை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கரோனா தொற்றால் உயிரிழந்த தினமணி செய்தியாளா் எம். சரவணக்குமாரின் மனைவி மற்றும் இரு மகன்கள். 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தினமணி நாளிதழின் செய்தியாளராகப் பணியாற்றி வந்த எம். சரவணக்குமாா் (39) கரோனா தொற்று காரணமாக கடந்த மே 18-ஆம் தேதி காலமானாா். கரோனா பாதிப்பால் உயிரிழக்கும் பத்திரிகையாளா்களின் வாரிசுகளுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்க்கப்படும் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை சரவணக்குமாரின் குடும்பத்தினரிடம்  முதல்வா் மு.க.ஸ்டாலின்  வழங்கினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com