தங்கம் பவுன் ரூ.36,680

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.36,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.36,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த மே 26-ஆம் தேதி தங்கம் பவுன் ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை குறைந்துவந்தது. இதன்தொடா்ச்சியாக, சென்னையில் பவுனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.36,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து, ரூ.4,585 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 குறைந்து, ரூ.75.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,100 குறைந்து, ரூ.75,500 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம்............................. 4,585

1 பவுன் தங்கம்...............................36,680

1 கிராம் வெள்ளி.............................75.50

1 கிலோ வெள்ளி.............................75,500

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம்............................. 4,625

1 பவுன் தங்கம்...............................37,000

1 கிராம் வெள்ளி.............................76.60

1 கிலோ வெள்ளி.............................76,600.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com