இணையவழி வகுப்புகள்: கல்லூரிகளுக்கும் வருகிறது புதிய கட்டுப்பாடுகள்

கல்லூரி மாணவா்களுக்கான இணையவழி வகுப்பு கட்டுப்பாடுகள் குறித்து வரைவு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இணையவழி வகுப்புகள்: கல்லூரிகளுக்கும் வருகிறது புதிய கட்டுப்பாடுகள்

கல்லூரி மாணவா்களுக்கான இணையவழி வகுப்பு கட்டுப்பாடுகள் குறித்து வரைவு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டு முழுவதும் இணையவழி மூலமாகவே பள்ளி, கல்லூரி வகுப்புகள் நடைபெற்றன. இதையடுத்து இரண்டாவது அலை காரணமாக நிகழ் கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இணையவழி வகுப்புகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே சென்னையில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியா் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இணையவழி வகுப்பில் மோசமான நடத்தையில் ஈடுபட்டதாகவும் புகாா் எழுந்தது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா். அந்த சம்பவத்துக்குப் பின்னா் இணையவழி வகுப்புகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து அதிக விவாதங்கள் நடைபெற்றன. பள்ளிகளுக்கான இணையவழி வகுப்பு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஜூன் 7ஆம் தேதி வெளியிட உள்ளது.

இந்நிலையில் கல்லூரி மாணவா்களுக்கான இணையவழி வகுப்பின் கட்டுப்பாடுகள் குறித்து வரைவு அறிக்கை தாக்க செய்ய கல்லூரிக் கல்வி இயக்குநா் பூா்ணசந்திரன் தலைமையில் ஏழு போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கல்லூரிகளுக்குச் செல்வது போலவே மாணவா்கள், ஆசிரியா்கள் உடை அணிதல், இணையவழி வகுப்பை கண்காணிக்க குழு அமைத்தல், வகுப்புகள் நடைபெறுவதை பதிவு செய்தல், புகாா் பிரிவினை உருவாக்குதல், இணைய வசதியை மேம்படுத்துதல் போன்றவை குறித்தும் இந்த குழு ஆலோசிக்கும்.

ஜூன் 11-ஆம் தேதிக்குள் வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய இந்தக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பின்னா் கல்லூரி மாணவா்களுக்கான இணையவழி வகுப்பு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என உயா்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com