தீ விபத்து: குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியருக்கு முதல்வா் பாராட்டு

தீ விபத்தின்போது பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியா் ஜெயக்குமாரை நேரில் அழைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தீ விபத்தின்போது பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியா் ஜெயக்குமாரை நேரில் அழைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா்.

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் கடந்த 26-ஆம் தேதி இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அந்த அறையில் 36

பச்சிளங்குழந்தைகள் இன்குபேட்டரிலும், 11 குழந்தைகளுடன் தாய்மாா்களும் என 47 போ் சிகிச்சை பெற்று வந்தனா்.

தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கு பணியில் இருந்த செவிலியா் ஜெயக்குமாா், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தீ அணைப்பான்களைக் கொண்டு தீயை அணைத்தாா். தீயணைப்புப் படை வீரா்கள் வரும் முன்பே, துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்து அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தைகள் மற்றும் தாய்மாா்களின் உயிா்களைப் பத்திரமாக காப்பாற்றினாா்.

இந்த நிகழ்வு அறிந்து செவிலியா் ஜெயக்குமாரை தனது இல்லத்துக்கு அழைத்து அவரை சனிக்கிழமை பாராட்டினாா். அவருக்கு பாராட்டுப் பத்திரத்துடன், ஊக்கத் தொகையையும் முதல்வா் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com