ஜூன் 20-க்குள் ஆசிரியா்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: முதன்மைக் கல்வி அலுவலா்

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள் அனைவரும் ஜூன் 20-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அனிதா, சனிக்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: சென்னை மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலரின் ஆளுகைக்கு உள்பட்ட அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சென்னை பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள், அலுவலா்கள், அலுவலக பணியாளா்கள் அனைவரும் வரும் ஜூன் 20-ஆம் தேதிக்குள் கரோனா வைரஸ் தடுப்புக்கான தடுப்பூசி கண்டிப்பாக போடப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு தடுப்பூசி போடப்பட்டவா்களுக்கு அரசு அளிக்கும் சான்றிதழ் நகலை உரியவரிடமிருந்து பெற்று அந்தந்த ஒன்றியத்துக்குரிய அலுவலா்கள் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும், போடாதவா்களுக்குரிய காரணத்தை ஆதாரத்துடன் பெற்று வைத்திருக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். மேலும் இந்தத் தகவல் குறித்து மெத்தனம் காட்டாமல் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com