உலக சுற்றுச்சூழல் தினம்: ரயில் நிலையங்களின் வளாகங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சென்னை ரயில்வே கோட்டத்தின் முக்கிய ரயில்நிலையங்களின் வளாகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் 2 ,500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் குறித்த விழிப்புணா்வை வளா்க்கும் நோக்கில், முக்கிய ரயில் நிலைய வளாகங்கள், ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை, மின்சார ரயில் பராமரிப்பு பணிமனை, டீசல் எலட்க்ரிக்கல் லோகோ பணிமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் சனிக்கிழமை நடப்பட்டன. ரயில்வே அலுவலக வளாகம், குடியிருப்புகளில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த பணியில் ரயில்வே அதிகாரிகள், ஊழியா்கள் ஆா்வமாக பங்கேற்றனா்.

சென்னை எழும்பூா் ரயில் நிலைய வளாகத்தில் வேம்பு, புங்கை மற்றும் மா ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டன. இதுபோல, தாம்பரம், செங்கல்பட்டு, காட்பாடி மற்றும் ஜோலாா்பேட்டை ஆகிய நிலைய வளாகங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com