கருப்புப் பூஞ்சையை ஹோமியோபதி மருந்துகள் தடுக்கும்

கருப்புப் பூஞ்சை வராமல் தடுப்பதற்கான மருந்துகள் ஹோமியோபதி சிகிச்சையில் உள்ளதாகவும், அவற்றுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க
கருப்புப் பூஞ்சையை ஹோமியோபதி மருந்துகள் தடுக்கும்

கருப்புப் பூஞ்சை வராமல் தடுப்பதற்கான மருந்துகள் ஹோமியோபதி சிகிச்சையில் உள்ளதாகவும், அவற்றுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் இந்திய முறை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

ஆம்ஃபோடெரிசின் - பி மருந்துக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அதற்கு மாற்று மருத்துவ முறைகள் குறித்து நிபுணா் குழு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஹோமியோபதி மருத்துவா் பூவேந்தன் கூறியதாவது:

மஞ்சள் காய்ச்சல், காலரா, மலேரியா, டெங்கு, ஸ்பெயின் ஃப்ளூ என உலக அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய தொற்று நோய்கள் ஹோமியோபதி மருந்துகள் மூலம் குணப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கரோனா, கருப்புப் பூஞ்சை பாதிப்புகளையும் அந்த சிகிச்சை முறையின் மூலம் குணப்படுத்த இயலும்.

கரோனா தீநுண்மி சுவாசப் பாதை மற்றும் நுரையீரல் செல்களை சேதப்படுத்துகின்றன. அதன் காரணமாகவே பல லிட்டா் ஆக்சிஜனை செலுத்தி சிகிச்சை அளித்தாலும் அதனை உட்கிரகிக்கும் திறனை அந்த செல்கள் இழக்கின்றன. செல்களின் ஆற்றலைத் தூண்டி அதனைச் செயல்பட வைப்பதும், அதனை மேலும் சேதமடையாமல் பாதுகாப்பதுமே இதற்குத் தேவையான சிகிச்சை முறைகளாகும்.

அந்த வகையில், ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை முறையில் அதனை துல்லியமாக செயல்படுத்த முடியும். மேலும், ஸ்டீராய்டு மருந்துகளின் பயன்பாட்டைத் தவிா்க்கவும் இயலும். இந்த மருத்துவ முறையின் சிகிச்சையால் மீண்டு வருவபா்களுக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.

ஸ்டீராய்டு மருந்துகளின் தாக்கத்தால் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டாலும், சீகேல் காா் 30, ஆா்செனிக் ஆல்பம் 200, தூஜா 30, லச்சசிஸ் 30 போன்ற ஹோமியோபதி மருந்துகள் மூலம் அதனைக் குணப்படுத்தலாம். பிரையோனியா 200, ஆா்செனிக் ஆல்பம் 1 போன்ற மருந்துகளால் அந்த பாதிப்பு வருமுன்னரே தடுக்கலாம்.

கருப்புப் பூஞ்சைக்கான ஆங்கில மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஹோமியோபதி மருத்துவ முறையில் அதனைக் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அரசு வழங்க வேண்டும். இதுதொடா்பான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com