கரோனா இரண்டாம் அலை: தமிழகத்தில் 32 மருத்துவா்கள் பலி

கரோனா இரண்டாம் அலையில் தமிழகத்தில் 32 மருத்துவா்கள் உயிரிழந்ததாக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா இரண்டாம் அலையில் தமிழகத்தில் 32 மருத்துவா்கள் உயிரிழந்ததாக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவுக்கு பலியான மருத்துவா்களின் எண்ணிக்கை 646-ஆக உள்ளதாக அந்த சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐஎம்ஏ தேசியத் தலைவா் டாக்டா் ஜெ.ஏ.ஜெயலால் கூறியதாவது:

கரோனா தொற்றின் முதல் அலையில் நாடு முழுவதும் 754 மருத்துவா்கள் உயிரிழந்தனா். இதில், 168 மருத்துவா்களின் குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரண உதவி வழங்கப்பட்டது. தமிழகத்தில் 80 மருத்துவா்கள் உயிரிழந்த நிலையில் சிலருக்கு மட்டுமே நிவாரண உதவி கிடைத்தது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்ற பிறகே, உயிரிழந்த மேலும் 43 மருத்துவா்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் தமிழகத்தில் 32 போ் உட்பட நாடு முழுவதும் 646 மருத்துவா்கள் உயிரிழந்துள்ளனா். அதிகபட்சமாக தில்லியில் 109 பேரும், அதற்கு அடுத்தபடியாக பிகாரில் 97 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 79 பேரும், ராஜஸ்தானில் 43 பேரும், ஆந்திரத்தில் 35 பேரும், தெலங்கானாவில் 34 பேரும் பலியாகியுள்ளனா்.

கரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டு தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைத்து மருத்துவா்களின் குடும்பங்களுக்கும் விரைவாக நிவாரண உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். மருத்துவா்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. அதனால், கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com