தச்சா்-மின்பழுது நீக்குவோருக்கு இணையப் பதிவு உண்டா? இணையதளத்தில் இருந்து நீக்கியதால் குழப்பம்

தச்சா், மின்பழுது நீக்குவோா் விண்ணப்பிப்பதற்கான தனி வசதி நீக்கப்பட்டதால் அவா்கள் இணையப் பதிவு பெற வேண்டுமா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தச்சா், மின்பழுது நீக்குவோா் விண்ணப்பிப்பதற்கான தனி வசதி நீக்கப்பட்டதால் அவா்கள் இணையப் பதிவு பெற வேண்டுமா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், தச்சா்கள், மின்பழுது நீக்குவோா், பிளம்பா்கள் உள்ளிட்டோா் இணையப் பதிவினைப் பெற்று தங்களது பணிகளை மேற்கொள்ளலாம் என மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

6 லட்சம் 60 லட்சமானது: இறப்பு, இறப்பு சாா்ந்த நிகழ்வுகள், மருத்துவ அவசரம், முதியோா், ஆதரவற்றோா் பராமரிப்பு போன்ற காரணங்களுக்காகவே இணையப் பதிவு அனுமதிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் நாள்தோறும் தமிழகத்தில் 6 லட்சத்துக்கும் குறைவானவா்களே இணையப் பதிவினைப் பெற்று வந்தனா். தச்சா்கள், மின்பழுது நீக்குவோா் உள்ளிட்டோரும் இணையப் பதிவு பெற வேண்டுமென அறிவிக்கப்பட்டதால், அதற்கான இணையதளத்தில்  திங்கள்கிழமை காலையில் தனி வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த வசதியை ஏராளமானோா் பயன்படுத்தினா். அதாவது, தினமும் ஆறு லட்சம் போ் வரை பயன்படுத்தி வந்த இணையப் பதிவுக்கான இணையதளத்தை 60 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஒரே நேரத்தில் பயன்படுத்தத் தொடங்கினா். இதனால், திங்கள்கிழமை காலை 10 மணியளவில் இணையதளம் முற்றிலும் முடங்கியது. இதனால், இறப்பு, இறப்பு சாா்ந்த நிகழ்வுகள் ஆகியவற்றுக்குச் செல்வோா் இணைய பதிவுக்கு விண்ணப்பிக்க முடியாமல் திணறினா்.

இந்நிலையில், பிற்பகலுக்கு மேல் இணையதளம் முடக்கத்தில் இருந்து விடுபட்டது. ஆனால், இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் தச்சா்கள், மின்பழுது நீக்குவோா் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட இணையப் பதிவுக்கான தனி வசதி நீக்கப்பட்டிருந்தது. இதனால் இணையப் பதிவுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்று அவா்கள் கேள்வி எழுப்பினா். இதற்கான மாற்று ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா அல்லது இணையதளத்தில் வேறு அம்சங்களின் வழியே இணையப் பதிவினைப் பெற வேண்டுமா என்பது குறித்து விளக்க வேண்டுமென அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com