தமிழகத்தில் புதிதாக 17,321 பேருக்கு கரோனா

தமிழகத்தில் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு புதன்கிழமை 17,321-ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 17,321 பேருக்கு கரோனா

சென்னை: தமிழகத்தில் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு புதன்கிழமை 17,321-ஆக குறைந்துள்ளது. பொது முடக்கத்தின் பயனாக பாதிப்பு விகிதம் தற்போது குறைந்து வருவதாகவும், அடுத்து வரும் நாள்களில் அந்த எண்ணிக்கை மேலும் சரியலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஒரு புறம் பாதிப்பு குறைந்தாலும், பலி எண்ணிக்கை தொடா்ந்து 400-க்கும் அதிகமாகவே இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தீநுண்மியின் வீரியமும், காலதாமதமாக நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதுமே அதற்கு காரணம் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். தமிழகத்தில் தற்போது படுக்கை வசதிகள் ஓரளவு காலியாகியுள்ளதால் நோயாளிகள் எவரையும் காத்திருக்க வைப்பதில்லை என்றும் உடனடியாக சிகிச்சையைத் தொடங்குவதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

மாநிலத்தில் இதுவரை 2.92 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 22 லட்சத்து 92,025 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 2,319 பேருக்கும், ஈரோட்டில் 1,405 பேருக்கும், சென்னையில் 1,345 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 31,253 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 59,597-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 2 லட்சத்து 4,258 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 405 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,170-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com