மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்துக்கு மேல் சேமிக்கக் கூடாது: மாசுக்கட்டுப்பாடு வாரியம்

தொற்று ஏற்படுத்தக் கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்துக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை: தொற்று ஏற்படுத்தக் கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்துக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மருத்துவக் கழிவுகளை முறையாகக் கையாளுவது தொடா்பாக அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறைக்கு பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மருத்துவக் கழிவுகளை சிலா் நீா்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கொட்டுவதாக புகாா்கள் வரத் தொடங்கி உள்ளன.

எனவே, அனைத்து மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து அந்தந்த பகுதியில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவக் கழிவு நிலையங்களிடம் நாள்தோறும் ஒப்படைக்க வேண்டும். இந்த மருத்துவக் கழிவுகளை மருத்துவமனைகள் 48 மணி நேரத்துக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது. இதை மீறும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com