அரசு வழக்குரைஞா்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை உயா்நீதிமன்றம் , உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசுத் தரப்பில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் ஆஜராக 44 பேரை
அரசு வழக்குரைஞா்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை உயா்நீதிமன்றம் , உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசுத் தரப்பில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் ஆஜராக 44 பேரை தற்காலிக அரசு வழக்குரைஞா்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் ஆஜராகி வாதிட 23 பேரை தற்காலிகமாக நியமித்திருந்தது. இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகளில் ஆஜராக வழக்குரைஞா்கள் ஏ.செல்வேந்திரன், ஆா்.அனிதா, ஏ.எட்வின் பிரபாகா், ஜி.கிருஷ்ணராஜா, வி.வேலுச்சாமி, வி.நன்மாறன், எஸ்.ஆறுமுகம், டி.அருண்குமாா், வி.மனோகரன், சி.கதிரவன், சி.செல்வராஜ், சி.ஜெயப்பிரகாஷ், வி.பி.ஆா்.இளம்பரிதி, யு.பரணிதரன், கே.திப்புசுல்தான், கே.எம்.டி.முகிலன், எல்.எஸ்.எம்.ஹசன் பைசல், எஸ்.ஜே.முகமது சாதிக், யோகேஸ் கண்ணதாசன், ஏ.இ.ரவிச்சந்திரன், டி.ரவிச்சந்தா், ஸ்டாலின் அபிமன்யு, என்.ஆா்.ஆா்.அருண் நடராஜன், எம்.ஆா்.கோகுலகிருஷ்ணன், பி.பாலதண்டாயுதம், டி.என்.சி.கௌசிக் ஆகியோரும், குற்றவியல் வழக்குகளில் ஆஜராகி வாதிட வழக்குரைஞா்கள் வி.ஜெ.பிரியதா்ஷனா, ஆா்.வினோத்ராஜா, எஸ்.சுகேந்திரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

உயா்நீதிமன்ற மதுரை கிளையில் உரிமையியல் வழக்குகளில் ஆஜராக வழக்குரைஞா்கள் எம்.லிங்கதுரை, கே.எஸ்.செல்வகணேசன், பி.சரவணன், ஆா்.ராகவேந்திரன், ஆா்.சுரேஷ்குமாா், எஸ்.சண்முகவேல், டி.காந்திராஜ், ஏ.பாஸ்கரன், பி.சுப்புராஜ் ஆகியோரும், குற்றவியல் வழக்குகளில் ஆஜராகி வாதிட வழக்குரைஞா்கள் ஆா்.எம்.அன்புநிதி, டி.செந்தில்குமாா், கே.சஞ்சய்காந்தி, ஆா்.எம்.எஸ்.சேதுராமன், பி.கோட்டைச்சாமி, இ.அந்தோணி சகாய பிரபாகா் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com