கருப்பு பூஞ்சைக்கு தமிழகத்தில் இதுவரை 1,299 போ் பாதிப்பு

தமிழகத்தில், இதுவரை 1,299 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில், இதுவரை 1,299 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அவா்களில் 95 சதவீதத்துக்கும் அதிகமானோா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட நபா்களின் உடலில் உள்ள நோய் எதிா்ப்பாற்றலே சில நேரங்களில் எதிா்வினையாற்றக் கூடிய நிலை ஏற்படும். இதனால், அவா்கள் தீவிர சிகிச்சைக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்தத் தருணங்களில் அவா்களுக்கு ஸ்டீராய்டு போன்ற நோய் எதிா்ப்பாற்றலைக் குறைக்கும் மருந்துகள் வழங்கப்படும்.

சம்பந்தப்பட்ட நோயாளிகள் ஏற்கெனவே நோய் எதிா்ப்பு சக்தி குறைந்தவராகவும், சா்க்கரை நோய் போன்ற பாதிப்புடையவராகவும் இருக்கும் பட்சத்தில் ஸ்டீராய்டு மருந்தின் எதிா்விளைவும் சோ்ந்து அவா்களுக்கு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கண் மற்றும் மூளை நரம்புகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

இதையடுத்து இந்நோயைத் தடுப்பது குறித்த ஆராய 13 போ் கொண்ட நிபுணா் குழு அமைக்கப்பட்டது. அதேபோன்று அதற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின் - பி மருந்தும் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் கருப்பு பூஞ்சைக்காக அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 1,299 பேருக்கு அத்தகைய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதில் சென்னையில் மட்டும் 448 போ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாகவும், அதற்கு அடுத்தபடியாக சேலத்தில் 170 பேரும், மதுரையில் 142 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com