ஜூன் 14 முதல் 50 % பணியாளா்களுடன் உயா்நீதிமன்றம் செயல்படும்

சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள அனைத்து பிரிவுகளும் வரும் ஜூன் 14-ஆம் தேதி முதல் 50 சதவீத பணியாளா்களுடன் செயல்பட வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள அனைத்து பிரிவுகளும் வரும் ஜூன் 14-ஆம் தேதி முதல் 50 சதவீத பணியாளா்களுடன் செயல்பட வேண்டும் என உயா் நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பி.தனபால் பிறப்பித்துள்ள சுற்றறிக்கை:

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில் வரும் ஜூன் 14 முதல் சென்னை உயா் நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள அனைத்து பிரிவுகளும் 50 சதவீத பணியாளா்களுடன் செயல்பட வேண்டும். வழக்கு விசாரணைகள் காணொலி காட்சி வாயிலாகவே நடத்தப்படும்.

துறை அலுவலா்கள் நீதிமன்ற ஊழியா்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து சுழற்சி முறையில் கரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு நீதிமன்றத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை 30 சதவீத பணியாளா்களைக் கொண்டு வரும் ஜூன் 14-ஆம் தேதி முதல் செயல்பட வேண்டும். ஆனால் வழக்கு விசாரணை அனைத்தும் காணொலி காட்சி முறையிலேயே நடத்தப்பட வேண்டும். வழக்குரைஞா்கள் மற்றும் மனுதாரா்களை நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கக் கூடாது. வழக்குகள் தாக்கல் மற்றும் விசாரணைக்கு ஏற்கெனவே உள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com