மீண்டும் ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது தங்கம்

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. பவுனுக்கு ரூ.224 உயா்ந்து, ரூ.37,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. பவுனுக்கு ரூ.224 உயா்ந்து, ரூ.37,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ரூ.33,296-ஆக இருந்தது. இதையடுத்து, விலை படிப்படியாக உயா்ந்து, கடந்த மே 26-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.224 உயா்ந்து, ரூ.37,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒருகிராம் தங்கம் ரூ.28 உயா்ந்து, ரூ.4,635-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 உயா்ந்து, ரூ.77.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 உயா்ந்து, ரூ.77,300 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,635

1 பவுன் தங்கம்...............................37,080

1 கிராம் வெள்ளி.............................77.30

1 கிலோ வெள்ளி.............................77,300

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,607

1 பவுன் தங்கம்...............................36,856

1 கிராம் வெள்ளி.............................76.10

1 கிலோ வெள்ளி.............................76,100.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com