நீட் தேர்வு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்!

நீட் தேர்வு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு அறிவித்துள்ளது. 
நீட் தேர்வு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்!

நீட் தேர்வு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் நீட் தேர்வின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 

மேலும், 9 பேர் கொண்ட இந்த குழுவில் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மருத்துவர் ஜவஹர் நேசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், சட்டத் துறைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வு குறித்து ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் இந்த குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி நடைபெற்றது. வருகிற 21-ம் தேதி இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், நீட் தேர்வு குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் அஞ்சல் வழி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது மருத்துவக் கல்வி இயக்குநகரத்தில் வைக்கப்பட்டுள்ள தனிப்பெட்டியில் நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மின்னஞ்சல் முகவரி: neetimpact2021@gmail.com

அஞ்சல் முகவரி: நீதியரசர் மாண்புமிகு ஏ.கே.ராஜன் உயர்நிலைக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம்(3 ஆவது தளம்), கீழ்பாக்கம், சென்னை - 600 010. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com