விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெ. மேகநாதரெட்டி பொறுப்பேற்பு

விருதுநகர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஜெ.மேகநாதரெட்டி வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.
விருதுநகர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஜெ.மேகநாதரெட்டி
விருதுநகர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஜெ.மேகநாதரெட்டி

விருதுநகர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஜெ.மேகநாதரெட்டி வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.
    
சென்னை மாநகராட்சியில் பணிகள் துணை ஆணையாளராக பணிபுரிந்து வந்த ஜெ.மேகநாதரெட்டி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தமிழக அரசின் அரசாணைப்படி வியாழக்கிழமை பொறுப்பேற்றார் .  

கடந்த 2013 -ஆம் ஆண்டு  ஐஏஎஸ் தோ்ச்சி பெற்றாா்.  பின்னா் டிசம்பர் - 2015 முதல் பிப்ரவரி - 2018-ஆம் ஆண்டு வரை சேலம் மாவட்டம் மேட்டூரில் சார் ஆட்சியராகவும், பிப்ரவரி 2018 முதல் செப்டம்பர் - 2018-ஆம் ஆண்டு வரை நில நிர்வாகத்துறை இணை ஆணையாளராகவும், செப்டம்பர் - 2018 முதல் மார்ச் - 2020-ஆம் ஆண்டு வரை வணிகவரித்துறை இணை ஆணையாளராகவும், மார்ச் - 2020 முதல் மே - 2021-ஆம் ஆண்டு வரை சென்னை மாநாகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையாளராகவும், செப்டம்பர் - 2020 முதல் மே - 2021-ஆம் ஆண்டு வரை சென்னை மாநாகராட்சி பணிகள் துணை ஆணையாளராகவும் பணியாற்றினாா்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com