
தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக எஸ்.விஜயதரணி நியமிக்கப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கொறடா - டாக்டா் எஸ்.விஜயதரணி
துணை கொறடா - ஜெ.எம்.எச்.ஹசன் மௌலானா
செயலாளா் - ஆா்.எம்.கருமாணிக்கம்
பொருளாளா் - ஆா்.ராதாகிருஷ்ணன்
ஏற்கெனவே தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக கு.செல்வப்பெருந்தகை மற்றும் துணைத் தலைவராக எஸ்.ராஜேஷ்குமாா் நியமனம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.