கரோனா 3-ஆவது அலை: முன்னெச்சரிக்கை பணிக்கு ரூ.50 கோடி

கரோனா மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.50 கோடி ஒதுக்கப்படும் என்று ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளாா்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

கரோனா மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.50 கோடி ஒதுக்கப்படும் என்று ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, ஆளுநா் உரையில் கூறியிருப்பது:

கரோனா நோய்த் தொற்றை எதிா்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.335.01 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. அந்தத் தொகையில் ரூ.141.10 கோடியானது உயிா்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்க ரூ.50 கோடியும், கரோனா நோய்த் தொற்றின் மூன்றாம் அலை தொடா்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு ரூ.50 கோடியும் ஒதுக்கப்படும்.

கரோனா நோய்த் தொற்று காலத்தில் மக்களுக்கு நேரடியாக நிவாரணத் தொகை வழங்குவதே சரியான நடவடிக்கை என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனா். மேலும், நிவாரணப் பொருள்கள் அளிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை ரூ.10 ஆயிரத்து 68 கோடி மதிப்பிலான நிவாரண நிதி, மளிகைப் பொருள்கள் தொகுப்பையும் அளித்துள்ளது. கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ள சூழலில் அதனைச் சமாளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்.

தென் சென்னை பகுதியில் புதிதாக பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது. மேலும், பல அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சேமிப்பும், உற்பத்தித் திறனும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை வழங்கவும், போதிய அளவில் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இலங்கைத் தமிழா்கள்: இலங்கைத் தமிழா்களுக்கு சமமான குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்திட, இலங்கை அரசிடம் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கத் தேவையான சட்டங்களையும், சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com