கூத்தாநல்லூரில் நியாயவிலைக் கடைகளில் ஆட்சியர் சோதனை

கூத்தாநல்லூரில் நியாய விலைக் கடைகளில், பொருள்களின் தரத்தை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் ஆய்வு நடத்தினார்.
நியாய விலைக் கடையின் இயந்திரத்தை சோதனையிடுகிறார் மாவட்ட ஆட்சியர்
நியாய விலைக் கடையின் இயந்திரத்தை சோதனையிடுகிறார் மாவட்ட ஆட்சியர்

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் நியாய விலைக் கடைகளில், பொருள்களின் தரத்தை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் ஆய்வு நடத்தினார்.

கூத்தாநல்லூர் வட்டம், காவனூர் நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் திடீர் சோதனையில் ஈடுபட்டார். கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி, நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருள்கள் தங்கு தடையில்லாமல் வழங்கப்பட்டு வருவதையும், பொருள்களின் தரத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, நியாய விலைக் கடைகளில் கரோனா நோய் தொற்று காலத்தில் மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய உணவுப் பொருள்களின் தொகுப்பு, கரோனா நிவாரண நிதி ரூ. 2000 மற்றும் மாதந்தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொது விநியோகப் பொருள்கள் ஆகியவை கரோனா கால கட்டத்தை கருத்தில் கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.

அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரம் அடிப்படையில் 14 வகையான மளிகைப் பொருள்களின் தொகுப்பு மற்றும் கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இவைகள் தடையில்லாமல் வழங்கப்பட்டு வருவதையும், நியாய விலைக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருள்கள் குறித்தும், நியாய விலைக் கடைகளில் கரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசு பொது மக்களுக்கு தெரிவித்துள்ள அறிவுரைகளான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றவா என்பது குறித்து ஆய்வு செய்ததாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஆய்குடி ஊராட்சிக்குள்பட்ட முகுந்தனூர் மற்றும் கொரடாச்சேரி உள்ளிட்ட இடங்களின் நியாய விலைக்கடைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி, வட்டாட்சியர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com