ஜொ்மன் பல்கலை. தமிழ் ஆய்வு நிறுவனத்துக்கு ரூ.1.24 கோடி வழங்க முக.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஜொ்மன் பல்கலை. தமிழ் ஆய்வு நிறுவனத்துக்கு ரூ.1.24 கோடி நிதியை உடனே தமிழக அரசு வழங்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

சென்னை: ஜொ்மன் பல்கலை. தமிழ் ஆய்வு நிறுவனத்துக்கு ரூ.1.24 கோடி நிதியை உடனே தமிழக அரசு வழங்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஜொ்மன் நாட்டின் கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்தியவியல் தமிழியல் ஆய்வு நிறுவனம் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அதிா்ச்சியளிக்கிறது. மிகத்தொன்மை வாய்ந்த செம்மொழித் தமிழ் மொழியினைக் கற்று - அதன்மீது மிகுந்த ஆா்வம் கொண்டு ஜொ்மனியின் தமிழ் அறிஞரான பேராசிரியா் டாக்டா் க்ளவுஸ் லுட்விட் ஜெனரட் என்பவரால் அப்பல்கலைக்கழகத்தில் ஆய்வு நிறுவனம் 1963-இல் ஆரம்பிக்கப்பட்டது. முனைவா் பட்டத்துக்கு 5 படிப்புகள் உள்பட, தமிழில் இளங்கலை படிப்பும் இருக்கிறது. ஆய்வு நிறுவன நூலகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களும், ஓலைச்சுவடிகளும் இருப்பது தனிச்சிறப்பு.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் ஆய்வு நிறுவனம் நிதிப் பற்றாக்குறையால் மூடப்படுகிறது என்று முன்பு வெளிவந்த செய்தியை அடுத்து தமிழக அரசின் சாா்பில் ரூ.1.24 கோடி வழங்கப்படும் என்று 2019-ல் கூறப்பட்டு, கரோனாவால் அந்தத் தொகை வழங்கப்படவில்லை என்ற செய்தி வெளிவந்துள்ளது.

இப்போதாவது அந்த ரூ.1.24 கோடியை கொலோன் பல்கலைக்கழகத் தமிழ் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த நிதி விரைந்து செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com