தம்மம்பட்டி: கரோனா தடுப்பூசியை பொதுமக்கள், ஆசிரியர்கள் ஆர்வமாக போட்டுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்

தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள், ஆசிரியர்கள் கரோனா தடுப்பூசியை ஆர்வமாக போட்டுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள ஆர்வமுடன் வரிசையில் காத்திருக்கும் மக்கள்.
தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள ஆர்வமுடன் வரிசையில் காத்திருக்கும் மக்கள்.


தம்மம்பட்டி: தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள், ஆசிரியர்கள் கரோனா தடுப்பூசியை ஆர்வமாக போட்டுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மார்ச் 1 -ஆம் தேதி முதல் சுகாதாரத் துறையினர் கரோனா தடுப்பூசி  போடத் தொடங்கியுள்ளனர். வரும் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட உள்ளதால் , ஆசிரியர்கள் அனைவரும் உடனடியாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு, அதற்கான புகைப்படத்தையும், அவரவர்களது செல்லிற்கு வரும் எஸ்எம்எஸ் தகவலையும் பிரிண்ட் எடுத்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் , வட்டார கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க பள்ளிக்கல்வித் துறை மார்ச் 2 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. 

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆசிரியர்.

அதனைத் தொடர்ந்து அரசு ஆசிரியர்கள் அனைவரும், அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்கோ, அல்லது அரசு செவிலியர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் இடங்களுக்கோ சென்று தங்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். 

கெங்கவல்லி வட்டாரம் முழுவதும்  மார்ச் 1 ஆம் தேதி  157 பேருக்கும், மார்ச் 2 ஆம் தேதி 277 பேருக்கும் என 2 நாள்களில் 434 பேருக்கு அரசின் இலவச தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நாள்களில் தடுப்பூசி போடப்படும் நபர்களின் எண்ணிக்கை கூடுதலாக்க அந்தந்த பகுதி அரசு மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் தீவிரமாக்கிட வீடு வீடாக சென்று தடுப்பூசி பணியில், ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com