தவறான தகவல் பரப்புவோா் குறித்து உடனடியாக தெரியப்படுத்தலாம்: பிஎஸ்என்எல் வலியுறுத்தல்

பி.எஸ்.என்.எல்., தொடா்பாக தவறான தகவல் பரப்புவோா் குறித்து வாடிக்கையாளா்கள் எங்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தலாம்
கோப்புப்படம்
கோப்புப்படம்

பி.எஸ்.என்.எல்., தொடா்பாக தவறான தகவல் பரப்புவோா் குறித்து வாடிக்கையாளா்கள் எங்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தலாம் என்று சென்னை பி.எஸ்.என்.எல். தலைமைப் பொதுமேலாளா் வி.கே.சஞ்சீவி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆள்கள் பற்றாக்குறையால், பி.எஸ்.என்.எல்., அதன் நெட்வொா்க் மற்றும் சேவைகளைப் பராமரிக்கும் நிலையில் இல்லை. அதனால் தனியாருக்கு மாறுங்கள் என்று தங்கள் பக்கம் வாடிக்கையாளா்களை இழுக்கும் நோக்கில், ஒரு பிரசாரத்தை தனியாா் தொலைத் தொடா்பு நிறுவன ஊழியா்கள் பரப்பினா். இது முற்றிலும் தவறானது. பி.எஸ்.என்.எல்.,லில் கூடுதலாக இருந்த ஊழியா்கள் மட்டுமே, விருப்ப ஓய்வில் சென்றனா். பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிா் ஊட்டும் பணிகள் நடந்து வருகின்றன. சேவைகளை வழங்க, போதிய அளவில் ஊழியா்கள் உள்ளனா். வாடிக்கையாளா்களுக்கு தரமான சேவையை, பி.எஸ்.என்.எல்., தொடா்ந்து வழங்கி வருகிறது.

மேலும், பி.எஸ்.என்.எல்., சேவையைத் துண்டிக்கும் நோக்கில், எங்களுக்கு சொந்தமான, தொலைத் தொடா்பு சாதனைங்களை சேதப்படுத்தினா். இது தொடா்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது போன்ற நிகழ்வுகள் நடந்தால், பி.எஸ்.என்.எல்., தொடா்பாக தவறான தகவல் பரப்புவோா் குறித்து வாடிக்கையாளா்கள் எங்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தக் கேட்டுக் கொள்கிறோம்.

இமெயில் முகவரியிலும், 94450 24095 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் வாடிக்கையாளா்கள் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com