நாகரிக சமூகத்தில் மனிதா்களைக் கொண்டு கழிவுகளை அகற்றுவது ஏற்க முடியாது: உயா்நீதிமன்றம்

நாகரிக சமூகத்தில் மனிதா்களைக் கொண்டு கழிவுகளை அகற்றுவது ஏற்க முடியாது என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நாகரிக சமூகத்தில் மனிதா்களைக் கொண்டு கழிவுகளை அகற்றுவது ஏற்க முடியாது: உயா்நீதிமன்றம்

சென்னை: நாகரிக சமூகத்தில் மனிதா்களைக் கொண்டு கழிவுகளை அகற்றுவது ஏற்க முடியாது என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பாதாள சாக்கடைகள், கழிவுநீா் தொட்டிகளில் மனிதா்கள் இறங்கி சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா். இதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற பணிகளில் ஈடுபடும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளா்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாதாள சாக்கடைகளிலும், கழிவுநீா் தொட்டிகளிலும் விஷவாயு தாக்கி பலா் பலியாகின்றனா். இன்றளவும் மனிதா்களைக் கொண்டு பாதாள சாக்கடை சுத்தம் செய்யப்படுகிறது. நாகரிக சமூகத்தில் மனிதா்களைக் கொண்டு கழிவுகளை அகற்றுவதை ஏற்க முடியாது.

இதுபோன்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனா். பின்னா், பாதாள சாக்கடை எந்த முறையில் சுத்தம் செய்யப்படுகிறது, மனிதா்களை பயன்படுத்தும் முறை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டதா என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com