
சென்னை: அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கும் எந்தவிதமான உதவிகளும் செய்யக் கூடாது என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் பணியில் இருக்கக் கூடிய அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கும் எந்தவிதமான உதவிகளையும் செய்யக் கூடாது. அரசியல் கட்சிகளுடன் வாக்கு சேகரிக்க செல்லக் கூடாது. தங்களது வாகனம், வீடுகளில் அரசியல் கட்சிகளின் சின்னங்களை பொறிக்க அனுமதிக்கக் கூடாது, வாக்குச்சாவடி முகவர்களாக பணியில் ஈடுபடக் கூடாது.
தேர்தல் பணியில் இருக்கக் கூடிய ஊழியர்கள் அனைவரும் தேர்தல் ஆணைய அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள்.
எனவே, தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறும் ஊழியர்கள் தேர்தல் விதி எண் 134 இன் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து பனிமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.